Rowdy time என்று குறிப்பிட்டு கருணாநிதி புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்தாரா?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘Rowdy time என்று குறிப்பிட்டு கருணாநிதி புகைப்படத்தை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ~ DMK va adikiradhuku ivaney podhum ! 😂 udhayanidhi’s rowdy time posts with his dogs,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வளர்ப்பு நாய் மற்றும் கருணாநிதி படத்துடன் உதயநிதி நிற்பது போன்ற புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

Claim Link  

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது உதயநிதி பெயரில் பரவும் பொய்யான தகவல், என்பது தெரியவந்தது. 

https://www.facebook.com/share/v/1GGiTpsh7T

ஆம், #Rowdytime என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி, உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது, அவரது சமூக வலைதள பக்கத்தில், வளர்ப்பு நாய் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். 

இந்த சூழலில், கடந்த ஜனவரி 02, 2026 அன்று கருணாநிதி படத்தின் அருகே நிற்பது போன்ற படம் ஒன்றை உதயநிதி, அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ஆனால், இந்த படத்திற்கு உதயநிதி கேப்ஷன் எதுவும் குறிப்பிடவில்லை. இதுதொடர்பாக, திமுக ஐடி., பிரிவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஸ்கிரின்ஷாட் எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:Rowdy time என்று குறிப்பிட்டு கருணாநிதி புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

Leave a Reply