
‘’ டெல்லி முதல் குஜராத் வரையான 14 வழி துவாரகா நெடுஞ்சாலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ டெல்லி முதல் குஜராத் வரை துவாரகா நெடுஞ்சாலை. அதிவிரைவு 14 வழிச்சாலை.
பயன்படுத்தப்படுகிறது.!
#ModiKiGuarantee’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட படம் உண்மையா என்று தகவல் தேடியபோது, இது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் சையது சாலை (Sheikh Zayed Road) என்று விவரம் கிடைத்தது.
கூடுதல் ஆதாரம் இதோ…
இதுதவிர, dwarka expressway என்பதற்கும், குஜராத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது.
எனவே, Dwarka Expressway என்று கூறி தவறான ஒரு தகவலை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘டெல்லி முதல் குஜராத் வரை துவாரகா நெடுஞ்சாலை’ என்று பகிரப்படும் படம் உண்மையா?
Written By: Fact Crescendo TeamResult: False
