‘’ மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் ஆபரேஷன்,’’ என்று என்று தினமலர் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

FB Claim Link l Archived Link

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.


உண்மை அறிவோம்:

ஃபேஸ்புக், ட்விட்டர், யூ டியுப் வளர்ச்சியால் ‘ஊடகவியலாளர்’ என்று சிலர் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அந்த வரிசையில், காசு மற்றும் பரிசுப் பொருள் வாங்கிக் கொண்டு அரசியல் கட்சிகள்/தனிநபர்கள் மீது தவறாகப் பிரசாரம் மேற்கொள்ளும் ஊடகவியலாளர்களை அம்பலப்படுத்தும் வகையில் மதன் ரவிச்சந்திரன் என்பவர் ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

kamadenu.hindutamil link l ibctamilnadu link

இதனால், கிஷோர் கே ஸ்வாமி, உமா மகேஷ்வரன், ஆதன் தமிழ் மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, ராஜவேல் நாகராஜன், ரவீந்திரன் துரைசாமி, முக்தார் என்று பலரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்த சூழலில், மேற்கண்ட விவகாரம் பற்றி தினமலர் செய்தி வெளியிட்டது போன்று பலரும் குறிப்பிட்ட நியூஸ் கார்டை ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், இது தினமலர் லோகோவுடன் பகிரப்படும் போலியான ஒன்றாகும். இதனை தினமலர் வெளியிடவில்லை.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு தினமலர் லோகோவுடன் பகிரப்படும் போலியான ஒன்றுதான் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் ஆபரேஷன்’ என்று தினமலர் செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False