
‘’Wig Boss என்று மு.க.ஸ்டாலினை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட விகடன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ Wig Boss,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
ஆனந்த விகடன் லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், இதுபற்றி நேரடியாக, விகடன் ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’ Wig Boss என்று மு.க.ஸ்டாலினை விமர்சித்து நாங்கள் எதுவும் கார்ட்டூன் வெளியிடவில்லை. ‘சட்டம் ஒழுங்கு சரியில்லை’ என்றுதான் நாங்கள் கார்ட்டூன் வெளியிட்டோம். அதனை எடிட் செய்து, சிலர் இவ்வாறு வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.
விகடன் வெளியிட்ட உண்மையான கார்ட்டூன் லிங்க் இதோ…
உண்மையான கார்ட்டூனையும், போலியான கார்ட்டூனையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கார்ட்டூன் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘Wig Boss’ என்று மு.க.ஸ்டாலினை விமர்சித்து விகடன் கார்ட்டூன் வெளியிட்டதா?
Fact Check By: Fact Crescendo TeamResult: Altered
