2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைப் பார்த்தால் 50 ஜிபி டேட்டா இலவசமா?

இந்தியா சமூக ஊடகம் விளையாட்டு

‘’2022 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை பார்த்தால், 50 ஜிபி டேட்டா இலவசம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

இதனை வாசகர்கள் சிலர் தொடர்ந்து, நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தனர்.

இதே தகவல் ஃபேஸ்புக்கிலும் பகிரப்படுகிறது. 

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பட்ட வாட்ஸ்ஆப் செய்தியில், ஒரு லிங்க் இணைத்துள்ளனர். இந்த லிங்க் ஒவ்வொரு பதிவுக்கும் வேறுபடுகிறது. ஆனால், இதனை திறந்து பார்த்தால், ஸ்பேம் லிங்க் போன்று நமக்கு காட்டுகிறது. தவிர, நமது ஸ்மார்ட்ஃபோனில் உள்ள தகவலை திருட, ஹேக் செய்ய இத்தகைய போலியான செய்திகளை சிலர் தயாரித்து பரப்புவதாக, தெரியவருகிறது. 


இப்படி எந்த அறிவிப்பும் பிஃபா வெளியிடவில்லை. இதுபோன்று செய்தி எதுவும் வெளியாகவில்லை. எனவே, உண்மையில்லாத இந்த செய்தியை யாரும் நம்பி பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். பொதுவாக, டேட்டா தொடர்பான ஆஃபர்களை நாம் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சேவை பெறுகிறோமோ அந்த நிறுவனம்தான் அதிகாரப்பூர்வமாக வழங்கும்.

இதுகுறித்து, தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘’இதுபோன்ற இலவச டேட்டா அறிவிப்புகளை யாரும் அறிவிப்பதில்லை. இவை பெரும்பாலும் ஒரு லிங்கை கொண்டிருக்கும். அந்த லிங்கை நாம் கிளிக் செய்தால், அதன்மூலமாக, நமது ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் வைரஸ் தானாகவே இன்ஸ்டால் செய்யப்படும். அப்படி இல்லை எனில் நமது தகவல்கள் திருடப்படும். இதுபோன்ற வதந்திகள் பல ஆண்டுகளாகப் பகிரப்படுகின்றன,’’ என்றனர்.   

முடிவு
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைப் பார்த்தால் 50 ஜிபி டேட்டா இலவசமா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply