அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை அமெரிக்காவில் டெஸ்லா கார் நிறுவனம் கொண்டாடியது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் RAM (ராம்) என்று உருவாக்கிய வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 22ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "Tesla held a Jai Shri Ram Light & Music show in California. The video is spectacular! 🙏

அமெரிக்காவில் டெஸ்லா ( கார்) நிறுவனம் இராமர் சிலை பிரதிஷ்டையை கொண்டாடுகிறது… இங்கே தமிழ்நாட்டில் சல்லிப்பயலுகள் கோவிலில் விசேச பூஜை பன்னாதே, அன்னதாணம் போடாதே, அது துலுக்கன் இருக்கிற ஏரியா, இது கிறிஸ்துவன் புழங்கற இடம் என்று தடை போடாறானுக… தட்டி கேட்க எந்த திராவிட நாய்களுக்கும் உணர்வில்லை…" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜனவரி 22, 2024 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது. இதை உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் கொண்டாடினர். அமெரிக்காவில் டெஸ்லா கார் நிறுவனம் ராமர் கோவில் திறப்பை கொண்டாடியது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

டெஸ்லா என்பது எலன் மாஸ்க்-ன் உடையது. அவர் நிறுவனம் ராமர் கோவில் திறப்பை கொண்டாடியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியையும் காணவில்லை. செய்தியே வரவில்லை என்றாலும் அதை அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் (ட்விட்டரில்) ஆவது பதிவிட்டிருப்பார். அவர் எக்ஸ் தளத்தில் அப்படி எந்த பதிவும் இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை அமெரிக்காவின் விஷ்வ இந்து பரிஷத் (Vishwa Hindu Parishad of America) தன்னுடைய யூடியூப் பக்கத்தில் 2024 ஜனவரி 18ம் தேதி பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில், "அமெரிக்காவின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்திய ஜெய் ஶ்ரீ ராம் டெஸ்லா லைட் ஷோ" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில், "அமெரிக்காவின் டெஸ்லா கார் வைத்துள்ள 100 ராம பக்தர்களை ஒன்று சேர்த்து ராம் என்று அமெரிக்காவில் ஃபிரடெரீக் எம்டி-யில் உள்ள ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் RAM என்று கார் ஹெட்லைட்டில் லைட் ஷோ நடத்தினர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தொடர்ந்து கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவு நமக்குக் கிடைத்தது. மேலும், இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளும் நமக்கு கிடைத்தன.

Archive

நம்முடைய ஆய்வில், டெஸ்லா கார் நிறுவனம் அயோத்தி ராமர் கோவில் திறப்பை அமெரிக்காவில் கொண்டாடியது என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

விஎச்பி ஏற்பாடு செய்த நிகழ்வை அயோத்தி ராமர் கோவில் திறப்பை அமெரிக்காவில் கொண்டாடிய டெஸ்லா கார் நிறுவனம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமர் கோவில் திறப்பு விழாவை டெஸ்லா கார் நிறுவனம் கொண்டாடியதா?

Written By: Chendur Pandian

Result: Misleading