
‘’உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் தோற்றால், இந்தியா முழுவதும் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, கடந்த 2019ம் ஆண்டு முதலே இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
Twitter Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில், அம்மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக உள்ள யோகி ஆதித்யநாத்தை மையப்படுத்தி ஏராளமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவற்றில் வதந்திகளும் நிறைய உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அவை பற்றி நாமும் அவ்வப்போது உண்மை கண்டறிந்து, கட்டுரை வெளியிட்டுள்ளோம். அந்த வரிசையில் பகிரப்படும் வதந்திதான் மேற்கண்ட தகவல்.
உண்மையில், இதில் பகிரப்பட்டுள்ள டெம்ப்ளேட்டின் மேலே உள்ள லோகாவில் M News என உள்ளதைக் காணலாம். இந்த M News logo குஜராத்தைச் சேர்ந்த Mantavya News என்ற ஊடகம் பயன்படுத்தும் ஒன்றாகும். எனவே, அந்த ஊடகத்தினரை நமது குஜராத் மொழிப் பிரிவினர் ஏற்கனவே தொடர்புகொண்டு, பேசி, இது வதந்தி என உறுதிப்படுத்தி, கட்டுரை வெளியிட்டுள்ளனர்.
நமது குஜராத் பிரிவினர் வெளியிட்ட கட்டுரையின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் தற்போது உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை மையமாக வைத்து, மேற்கண்ட வதந்தியை தொடர்ச்சியாக சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:தேர்தலில் தோற்றால் நாடு முழுவதும் தீ வைப்பேன் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
