
‘’ஜப்பானில் சுனாமி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சுனாமி ஜப்பான்…..😢 😢 😢 😢 1 minute before tsunami hit Japan in 2025 today japan,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதல் தொடர்பான வீடியோ என்று, தெரியவந்தது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Tokyometal l ANNnewsCH l 2011 Japan Tsunami Archives
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது எடுக்கப்பட்டது இல்லை; 2011ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல் தொடர்பானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ஜப்பானில் சுனாமி என்று பரவும் பழைய வீடியோவால் சர்ச்சை…
Written By: Pankaj IyerResult: Misleading
