வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் இந்திய ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் இந்திய ராணுவம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ எங்கள் ராணுவத்தின் அருமை👍👍,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link  

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள சூரல்மலை, முண்டகை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

The Hindu Link l News18 Tamil Link  

இதையொட்டி சமூக வலைதளங்களில் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாக பகிரப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவும்…

இந்த வீடியோவில் பறக்கும் ஹெலிகாப்டரை பார்ப்பதற்கு, நமது இந்திய ராணுவத்திற்குச் சொந்தமானது போன்று இல்லை. 

தொடர்ந்து நாம் தகவல் தேடியபோது, கடந்த 2015ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் நிகழ்ந்த சூறாவளி தாக்குதல் தொடர்பான வீடியோ இது என்று தெரியவந்தது. 

அங்குள்ள Joso (Tokyo), Tochigi, Ibaraki and Niigata பகுதிகளில் Etau சூறாவளி (Typhoon) காரணமாக, 2015, செப்டம்பரில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பலர் உயிரிழந்தது மட்டுமின்றி ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. குறிப்பாக, Joso என்ற இடத்தில், வெள்ளத்தால் பரிதவித்த பொதுமக்களை ஜப்பான் ராணுவம், ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இது. 

முழு வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.  

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

The Guardian Link l Independent Link l NBC News Link  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், தற்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் இந்திய ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False