‘’ஈரான் நாட்டில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ஈரான் தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை. ஷரியா சட்டம் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று தகவல் தேடினோம். அப்போது, இது கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த செய்தி என்றும், ஈரான் நாட்டிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது.

ஆம், ஈராக் நாட்டின் வடக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள மொசூல் நகரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு 2014 முதல் 2016 வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அப்போது, அங்குள்ள Nabi Younis மார்க்கெட் பகுதியில் கடை நடத்திய ஒருவரின் மகன் (Ayham Hussein) சிடி பிளேயரில் பாப் இசை கேட்டுள்ளான். இதனால், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பொது மக்கள் முன்பாக, அந்த 15 வயது சிறுவனின் தலையை வெட்டி, மரண தண்டனையை நிறைவேற்றினர்.

இதுதொடர்பான கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

ibtimes.co.uk l www2.cbn.com l dailystar.co.uk

2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த செய்தி வெளியான நிலையில், குறிப்பிட்ட சிறுவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ISIS executioner 'The Bulldozer' என்ற நபர் அதே ஆண்டு ஜூன் மாதம் ஈராக்- சிரியா கூட்டுப் படையினரால் கைது செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

au.news.yahoo.com l news.com.au l thesun.co.uk l mirror.co.uk

எனவே, 2016ம் ஆண்டு ஈராக் நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் நிகழ்த்திய கொலைக் குற்றம் தொடர்பான புகைப்படம் ஒன்றை எடுத்து, தற்போது ஈரானில் நடக்கும் அட்டூழியம் என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள் என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஈரான் நாட்டில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading