
‘‘பிரதமர் மோடியின் புதிய கெட்டப்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இந்த படத்தை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நாம் குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம். அப்போது, இது AI முறையில் தயாரிக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது. இதனை முதலில் ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவை கீழே இணைத்துள்ளோம்.
AI என்றால் Artificial intelligence என்பதன் சுருக்கம் ஆகும். நமக்குத் தேவையான விவரங்களை சமர்ப்பித்தால் நாம் விரும்பும் நபரின் புகைப்படத்தை அச்சு அசலாக இருப்பதைப் போலவே AI இணையதளங்கள் உருவாக்கித் தரும்.

DALL-E, Dreamstudio, Picsart, creativefabrica, Starry AI, Fotor, Canva, Hotpot என ஏராளமான இணையதளங்கள் உள்ளன.
இதுபற்றிய செயல் விளக்க வீடியோ ஒன்றும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஆதாரத்திற்கு, சில செய்தி ஆதாரங்களை இணைத்துள்ளோம்.
boredpanda link l Indiatimes link l dnaindia link
நம் பங்குக்கு நாமும் Canva இணையதளம் சென்று, சில கீவேர்ட் பயன்படுத்தி, மோடி பெயரில் புகைப்படங்களை செயற்கையாக உருவாக்கி பார்த்தோம். அவற்றினை கீழே பார்க்கலாம்.




எனவே, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நாம் விரும்பும் வகையில் ஒருவர் பற்றி எவ்வாறு வேண்டுமானாலும், நாம் AI புகைப்படங்களை தயாரிக்கலாம் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பிரதமர் மோடியின் புதிய கெட்டப் என்று பரவும் AI படத்தால் சர்ச்சை…
Fact Check By: Fact Crescendo TeamResult: False
