தனியார் மகளிர் விடுதியில் பெண் வேண்டும் என கேட்ட முன்னாள் எம்.பி.,யின் கணவர்? பழைய செய்தியால் சர்ச்சை!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’கோவையில் முன்னாள் பெண் எம்பி., ஒருவரின் கணவர் மகளிர் விடுதி நிர்வாகியை தொடர்பு கொண்டு, ஏதேனும் பெண்ணை சப்ளை செய்யும்படி கேட்டுள்ளார். புகாரை ஏற்க போலீஸ் மறுப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இந்த வீடியோவில் உள்ள லோகோவின் அடிப்படையில், இதனை வெளியிட்ட ஆன்லைன் ஊடகத்தின் (Tamil Maalai TV ) பதிவையும் கண்டுபிடித்தோம். ஏராளமான ஷேர், லைக் மற்றும் லட்சக்கணக்கான பார்வையாளர்களையும் அந்த பதிவு பெற்றுள்ளது.

Facebook Claim Link I Archived Link

இந்த பதிவின் கமெண்ட் பிரிவில், பலர் இதனை தற்போதைய திமுக ஆட்சியில் நிகழ்ந்த சம்பவம் போல குறிப்பிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மை அறிவோம்:
இதுபற்றி தகவல் தேடியபோது, கடந்த 2019ம் ஆண்டில் வெளியான செய்தி ஒன்றை கண்டோம். அதில், மேற்கண்ட வீடியோ செய்தி அப்படியே இடம்பெற்றிருந்தது. இதன்மூலமாக, 2019ல் வெளியான செய்தியை உண்மை தெரியாமல், மீண்டும் புதியதுபோல தற்போது பகிர்ந்து குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர் என்று தெளிவாகிறது. 

2019 செப்டம்பர் 13ம் தேதியில் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் வெளியிட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

இந்த செய்தியில், ‘’ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் விடுதியில் பெண் உரிமையாளரிடம் திருப்பூர் முன்னாள் எம்பி சத்யபாமாவின் கணவர் உல்லாசத்திற்குப் பெண் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகியிருக்கிறது,’’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

சத்யபாமா அதிமுக சார்பாக, திருப்பூர் எம்.பி. பதவி வகித்தவர் ஆவார். கடந்த 2018ம் ஆண்டே சத்யபாமாவை கொலை செய்ய முயன்ற புகாரில், அவரது கணவர் வாசு கைது செய்யப்பட்டார். 2016ம் ஆண்டு முதலாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் மற்றொரு செய்தியில் கூறப்பட்டிருந்தது.

Puthiyathalaimurai News Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

திருப்பூர் முன்னாள் எம்பி சத்யபாமா அவரது கணவர் வாசுவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரை கொல்ல முயன்ற புகாரில் வாசு கைது செய்யப்பட்டும் உள்ளார்.

இந்நிலையில், வாசு தனியார் மகளிர் விடுதி நிர்வாகியிடம் பெண் சப்ளை செய்யும்படி கேட்டதாக, கடந்த 2019ம் ஆண்டு ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது. இதற்கிடையே 2021ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, அதிமுக தோல்வியடைந்து, திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

இப்படி, பழைய செய்தியை எடுத்து, புதியதுபோல பகிர்ந்து, புகார் அளிக்கச் சென்ற மகளிர் விடுதி நிர்வாகியிடம் புகாரை ஏற்றுக் கொள்ளாமல் போலீசார் பிரச்னை செய்ததாகக் கூறி, சமூக வலைதள பயனாளர்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:தனியார் மகளிர் விடுதியில் பெண் வேண்டும் என கேட்ட முன்னாள் எம்.பி.,யின் கணவர்? பழைய செய்தியால் சர்ச்சை!

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context