பிரதமர் மோடிக்கு விசா வழங்க மறுத்த சிங்கப்பூர்: உண்மை அறிவோம்!

பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் அரசு விசா வழங்க மறுத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை Archived link பிரதமர் மோடியின் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “விசா மறுப்பு… *** அடித்து விரட்டியது சிங்கப்பூர் அரசு” என்று உள்ளது. படத்தின் கீழ்ப் பகுதியில், “மனிதனைக் கொல்லும் மனித மிருகங்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

செருப்பு அணிந்தபடி குருவாயூர் கோவிலுக்குச் சென்ற மோடி– ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

குருவாயூர் சென்ற பிரதமர் மோடி, செருப்புக் காலுடன் கிருஷ்ணன் கோவிலுக்குள் சென்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அல்பனுக்கு வாழ்வு வந்தால் குருவாயூர் கோவிலில் செருப்பு போட்டு நடப்பானாம் அவன் யார் ? Archived Link கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் பிரதமர் நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், பிரதமர் காலில் செருப்பு இருப்பதை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளனர். […]

Continue Reading

ஆந்திர துணை முதல்வராக ரோஜா நியமனம்: ஃபேஸ்புக் வதந்தியால் பரபரப்பு

‘’ஆந்திர துணை முதல்வர் ஆனார் ரோஜா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Balaji C என்பவர் இந்த பதிவை இணையதள திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனை பலரும் உண்மை என நம்பி, ரியாக்சன் செய்து வருகிறார்கள். உண்மை அறிவோம்:இதுதொடர்பாக, முதலில் ஃபேஸ்புக்கில் ஏதேனும் செய்தி கிடைக்குமா என தேடிப் பார்த்தோம். இப்படி பலரும் ரோஜா பற்றி […]

Continue Reading

1000 பேர் உயிரைக் கொடுத்தாவது இந்தியை எதிர்ப்போம்– வைகோ கூறியதாக பரவும் தகவல்!

தொண்டர்கள் ஆயிரம் பேர் உயிரைக் கொடுத்தாவது ஹிந்தியை எதிர்ப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: ஸ்டாலின் உம் என்று கூறட்டும் , பிரளயத்தை ஏற்படுத்துவோம் – வைகோ Archived link புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், “நான் சரியென்று சொன்னால் சாக உண்மையான தொண்டர்கள் […]

Continue Reading

உலக வர்த்தக மைய தாக்குதலில் பின்லேடனுக்கு தொடர்பு இல்லை– சிஐஏ மன்னிப்பு கோரியதா?

அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் பின் லேடனுக்கும் தொடர்பு இல்லை என்று சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளதாகவும் இது தொடர்பாக அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஆப்கானிஸ்தானை நாசமாக்கியது எங்கள் அயோக்கியத் தனமேயன்றி வேறில்லை. Archived link அமெரிக்க இரட்டை வர்த்தக மைய கோபுர தாக்குதலுக்கும் பின் லேடனுக்கும் சம்பந்தமில்லை. மன்னிப்பு கோரிய அமெரிக்க உளவுத் துறை என்று கூறப்பட்டுள்ளது. […]

Continue Reading