ஆந்திர துணை முதல்வராக ரோஜா நியமனம்: ஃபேஸ்புக் வதந்தியால் பரபரப்பு

அரசியல் சமூக ஊடகம்

‘’ஆந்திர துணை முதல்வர் ஆனார் ரோஜா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\roja 2.png

Archived Link

Balaji C என்பவர் இந்த பதிவை இணையதள திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனை பலரும் உண்மை என நம்பி, ரியாக்சன் செய்து வருகிறார்கள்.

உண்மை அறிவோம்:
இதுதொடர்பாக, முதலில் ஃபேஸ்புக்கில் ஏதேனும் செய்தி கிடைக்குமா என தேடிப் பார்த்தோம்.

C:\Users\parthiban\Desktop\roja 3.png

இப்படி பலரும் ரோஜா பற்றி பதிவு வெளியிட்ட நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி, இதுதொடர்பாக ஏதேனும் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டாரா என கூகுளில் விவரம் தேடினோம். அப்போது, ஆந்திர முதல்வரா சமீபத்தில் பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, தனது அமைச்சரவையில், பல்வேறு ஜாதி பின்னணியை சேர்ந்த 5 துணை முதல்வர்களை நியமிப்பதாக, அறிவித்துள்ளார் என ஆதாரம் கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\roja 4.png

அதிகாரப் பகிர்வு, பிரதிநிதித்துவம் என்ற முறையில், எஸ்சி, எஸ்டி, பிசி, காப்பு மற்றும் சிறுபான்மையினத்தவர் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த 5 பேருக்கு ஜெகன் மோகன் ரெட்டி துணை முதல்வர் பதவி அளித்துள்ளார். இந்த 5 பேரில், ஒருவர் பெண் ஆவார். ஆனால், அவர் ரோஜா இல்லை. அவரது பெயர் பமுலா புஷ்பா ஸ்ரீவாணி. இவர் தவிர எஞ்சிய 4 பேர் ஆண்கள். அவர்களின் பெயர், பில்லி சுபாஷ் சந்திரபோஸ், கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், நாராயண சாமி, அம்ஜத் பாஷா. இதுதொடர்பான, விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\roja 5.png

எனவே, விஷமத்தனமான வகையில், துணை முதல்வர் பதவியில் இல்லாத ஒருவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது உறுதியாகிறது. தற்போதைய நிலையில், ரோஜா, ஜெகன் கட்சியின் சார்பாக, ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். அவரது பெயர் துணை முதல்வர் பதவிக்கு அடிபட்ட நிலையில், அவருக்கு ஜெகன் பதவி வழங்காமவிட்டுவிட்டார் என்பது, அவரது ஆதரவாளர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமே உண்மை. இதுதொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிச் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\roja 6.png

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ரோஜா, ஆந்திர முதல்வராக நியமிக்கப்படவில்லை. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆந்திர துணை முதல்வராக ரோஜா நியமனம்: ஃபேஸ்புக் வதந்தியால் பரபரப்பு

Fact Check By: Parthiban S 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •