ஓட்டலில் தங்க இடம் தராததால் சாலையோரம் படுத்து உறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு?

‘’ஓட்டலில் தங்க இடம் தராததால் சாலையோரம் படுத்து உறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link கலைச்செல்வம் சண்முகம் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’நடிகர் அர்னால்டு, கலிஃபோர்னியா மாகாண ஆளுநராக இருந்தபோது ஒரு ஓட்டலை திறந்து வைத்தார். அந்த ஓட்டல் முகப்பில் அர்னால்டின் சிலை இருக்கும். அங்கு எப்போது […]

Continue Reading

6000 ஆண்டுகள் பழமையான பாவோ பாப் மரம்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

‘’6000 ஆண்டுகள் பழமையான பாவோ பாப் மரம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரியா பாலாஜி என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ராட்சத மரம் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, தென்னாப்ரிக்காவில் உள்ள 6000 ஆண்டுகள் பழமையான மரம் எனக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து […]

Continue Reading

கலைஞர் மறைந்து ஓராண்டாகியும் அவரது கோபாலபுரம் வீடு மருத்துவமனையாகாதது ஏன்?

“என் மறைவுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லம் மருத்துவமனையாக மாற்றப்படும்” என்று கருணாநிதி கூறினார். ஆனால், வருடம் ஒன்று ஆகப்போகிறது, தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாத இவரால் எப்படி தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என் மறைவிற்குப் பிறகு […]

Continue Reading

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளைப் பெற்ற பெண்: உலக சாதனையா; வெறும் வதந்தியா?

ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 17 ஆண் குழந்தைகளைப் பெற்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஒரு படுக்கையில் 11 பச்சிளம் குழந்தைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அருகில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். பின்னணியில், சூரத் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது. நிலைத் தகவலில், “ஒரே பிரசவத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 17 ஆண் குழந்தைகள் பெற்ற […]

Continue Reading

“தேசியக் கொடி கூட ஏற்றத் தெரியாத அமித்ஷா?” – ஃபேஸ்புக் வைரல் வீடியோ

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தேசிய கொடி கூட ஏற்றத் தெரியவில்லை என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 அமித் ஷா தேசியக் கொடி ஏற்ற வருகிறார். அவர் கொடி ஏற்றுவதற்குப் பதில் வேகவேகமாக கொடியை கீழே இறக்குகிறார். பின்னர் சுதாரித்துக்கொண்டு கொடியை ஏற்றுகிறார். பின்னணியில் தேசிய கீதம் பாடப்படுகிறது. […]

Continue Reading