“தேசியக் கொடி கூட ஏற்றத் தெரியாத அமித்ஷா?” – ஃபேஸ்புக் வைரல் வீடியோ

அரசியல் சமூக ஊடகம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தேசிய கொடி கூட ஏற்றத் தெரியவில்லை என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Amit Shah 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

அமித் ஷா தேசியக் கொடி ஏற்ற வருகிறார். அவர் கொடி ஏற்றுவதற்குப் பதில் வேகவேகமாக கொடியை கீழே இறக்குகிறார். பின்னர் சுதாரித்துக்கொண்டு கொடியை ஏற்றுகிறார். பின்னணியில் தேசிய கீதம் பாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பாரத் மாதாகி ஜெ, வந்தேமாதரம் தொண்டர்கள் முழக்கம் எழுப்புகின்றனர். வீடியோவில் மூன் விஷன் என்ற லோகோ உள்ளது. 

30 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை 2019 ஆகஸ்ட் 15ம் தேதி பழுவேட்டரையர் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் பகிர்ந்துள்ளார். நிலைத் தகவலில், “ஏன்டா கொடியேத்த கூட தெரியாதா உனக்கு… அசிங்க பட்ட அமித்ஷா..” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்று இல்லை. 2019 ஆகஸ்ட் 15ம் தேதி வெளியட்டிருப்தால், சுதந்திர தினத்தன்று நடந்தது என்றே பலரும் கருதி இதைப் பகிர்ந்து வருவது தெரிந்தது.

வீடியோவில் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டவர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் போலத் தெரிகிறது. இந்த வீடியோ உண்மையானது போலவே தெரிந்தது. எனவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதில் இறக்கினாரா? அது தொடர்பாக செய்தி, வீடியோ உள்ளதா என்று கூகுளில் தேடினோம்.

அப்போது, 2018 சுதந்திர தினத்தன்று டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக செய்திகள் மற்றும் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன.

Amit Shah 3.png

Search Link

இந்தியா டுடேவில் வெளியான செய்தியில், கொடியை ஏற்றுவதற்கு பதில் இறக்கியது பற்றியும், தப்பும் தவறுமாக தேசிய கீதத்தைப் பாடியதைப் பற்றியும் காங்கிரஸ் கட்சி விமர்சித்திருப்பதாகத் தெரிவித்திருந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த ட்வீட்டையும் வெளியிட்டிருந்தனர். 

செய்தி 1

செய்தி 2

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றிருந்த வீடியோவை டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் வெளியிட்டிருந்தது.  ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அந்த வீடியோவை வெளியிட்டிருந்ததும் தெரிந்தது.

Archived Link

நம்முடைய ஆய்வில், அமித் ஷா தேசிய கொடியை ஏற்றுவதற்கு பதில் இறக்கிய சம்பவம் 2019 சுதந்திர தினத்தன்று நடைபெறவில்லை. 2018ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை இப்போது நடந்ததுபோல பதிவிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஓராண்டுக்கு முந்தைய பழைய வீடியோவை, தற்போது நடந்தது போல பகிர்ந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“தேசியக் கொடி கூட ஏற்றத் தெரியாத அமித்ஷா?” – ஃபேஸ்புக் வைரல் வீடியோ

Fact Check By: Rajesh Pillewar 

Result: Mixture