டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு என்று பரவும் பழைய செய்தியால் சர்ச்சை…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ நேரத்தை குறைத்து விற்பனை அதிகரிக்கும் திராவிட மாடல் திட்டம் குடி மகன்கள் கவலைபட வேண்டாம்?,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் கீழே, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், இதுபற்றி நேரடியாக, தந்தி டிவி ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’ இது 2021ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் நாங்கள் வெளியிட்ட செய்தி. தற்போது எதுவும் இவ்வாறு நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று தெரிவித்தனர். 

இதேபோன்று, மேலும் சில ஊடகங்களிலும் அப்போதே செய்தி வெளியாகியுள்ளது. 

PuthiyaThalaimurai Link l ETV Bharat Tamilnadu Link   

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில், 2021ம் ஆண்டு வெளியான செய்தியை பகிர்ந்து, புதியது போன்று குறிப்பிட்டு, ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு என்று பரவும் பழைய செய்தியால் சர்ச்சை…

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISLEADING