பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா?- முழு விவரம் இதோ!

உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனர்,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு தகவலை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ஆண் ஒருவர் காயத்துடன் இருக்க, குடியிருப்புகள் தீயிட்டு கொளுத்தப்படும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் வாழும் 21 இந்து குடும்பத்தினரை குழந்தைகளோடு வைத்து எரித்த இஸ்லாமிய பயங்கரவாதிகள். இந்து பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்த தீவிரவாதிகள்,’’ என்று எழுதியுள்ளனர். 

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
இந்த செய்தி உண்மையான என்ற சந்தேகத்தில் கூகுள் உள்ளிட்ட இணையதளங்களில் இதுபற்றிய புகைப்படத்தை பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். ஆனால், விவரம் கிடைக்கவில்லை. பிறகு, விதவிதமான கீவேர்ட் பயன்படுத்தி தகவல் தேடினோம். அப்போது, இதுபற்றிய விவரம் கிடைத்தது. 

இந்த விவகாரம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்ததுதான். பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இவர்கள் கூறுவது போல, 21 இந்து குடும்பத்தினர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்படவில்லை.  

இதுபற்றி ட்விட்டரில் ஒருவர் தகவல் பகிர, அதற்கு பாகிஸ்தானின் பஞ்சாப் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

Archived Link

இதனை கூகுள் உதவியுடன் மொழி பெயர்த்து பார்த்தோம். 

நிலத் தகராறு காரணமாக, ஆண் ஒருவரையும், அவரது மனைவியையும் தாக்கிய அண்டை வீட்டார், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரமும் செய்திருக்கின்றனர். இதன்பேரில், சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். 

Archived Link 

இந்த ட்விட்டர் பதிவின் ஆங்கில மொழி பெயர்ப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

எனவே, நிலத் தகராறு காரணமாக, ஏழை விவசாயி ஒருவரையும், அவரது மனைவியையும் அண்டை வீட்டில் வசிப்பவர்கள் தாக்கியுள்ளனர். அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனைச் செய்தவர்கள் மீது பஞ்சாப் மாகாண போலீசார் கைது நடவடிக்கையும் எடுத்துள்ளனர். அத்துடன், இதில் யாரும் கொலை செய்யப்படவில்லை என்றும், இது மத ரீதியான பிரச்னை இல்லை என்றும் உறுதியாகிறது. 

மேலும், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்படும் புகைப்படத்தில் உள்ள குடியிருப்புகள் தீப்பற்றி எரியும் காட்சி எங்கே எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா?- முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

1 thought on “பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா?- முழு விவரம் இதோ!

Comments are closed.