‘என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்,’ என்று நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்’’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம். என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிதான் மீண்டும் வரவேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் எனக்கு பாதுகாப்பான கட்சியாக பாஜக தெரிந்தது – பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link   

சன் நியூஸ் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2021ம் ஆண்டு சன் நியூஸ் ஊடகம் வெளியிட்ட செய்தியை இவ்வாறு மறுபகிர்வு செய்து வருகிறார்கள், என்று தெரியவந்தது. 

இதன்படி, 2021ம் ஆண்டு சன் நியூஸ் வெளியிட்ட செய்தியை ஆதாரத்திற்காக, இணைத்துள்ளோம். 

இதன்படி, கடந்த 2021ம் ஆண்டு, அதிமுக.,வில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக, நயினார் நாகேந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. 

ஆனால், தற்போது நயினார் நாகேந்திரன், பாஜக.,வின் தமிழ்நாடு மாநில தலைவராக உள்ளார். மேலும், பாஜக மற்றும் அதிமுக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பழைய செய்தியை எடுத்து, புதியது போன்று சமூக வலைதளங்களில் சிலர் வேண்டுமென்றே இவ்வாறு வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:‘என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்,’ என்று நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: MISSING CONTEXT

Leave a Reply