‘’ வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ Hindus at Bagaledesh😡😡😡

இதற்கெல்லாம் ஒரு முடிவு உண்டு கதற வேண்டிய நேரம் வரும்

அமைதி மார்க்கம் 😡

டேய் எவனாவது இது பொய்னு வந்தீங்க செருப்பு பிஞ்சிரும்

எல்லாவத்துக்கும் ஒரு விலை கொடுத்தே ஆகணும்டா

எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடுங்கடா பதில் குடுத்தே தீரணும்

#Bangladesh #BangladeshHindus #BangladeshiHindus #SaveBangladeshiHindus #SaveHindusInBangladesh’’, என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்றும், இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 2022ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.

கூடுதல் செய்தி ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

BBC Link l Hindustan Link l Aajtak Link l Navbharat Times Link

இதன்படி, கடந்த 2022ம் ஆண்டு, பீகார் மாநிலம், ஹஜிப்பூரில் பூம்பூம் மாட்டுடன் சாதுக்கள் போன்ற கெட்டப்பில் வந்து யாசகம் கேட்ட இஸ்லாமியர்களை, அப்பகுதி பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த சிலர் இவ்வாறு கட்டிப்போட்டு, அடித்ததாக மேற்கண்ட செய்திகளின் மூலம் தெரியவருகிறது.

எனவே, வேறொரு வீடியோவை எடுத்து, தற்போதைய வங்கதேச அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள் என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING