
‘‘தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், ‘’புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது’’ என்று எழுதப்பட்டுள்ளது. ’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் குழு TN Factcheck மறுப்பு கூறியுள்ளதாக, தெரியவந்தது.
கடந்த 2022ம் ஆண்டு வெளியான செய்தியை எடுத்து, தற்போதைய சட்டமன்ற தேர்தல் சூழலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புவதாக, TN Factcheck குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, 2022ம் ஆண்டு புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியில் இடம்பெற்ற டெம்ப்ளேட் ஒன்றை எடுத்து, புதியது போன்று தற்போது பரப்புகிறார்கள்.

முழு வீடியோ லிங்க் இதோ…
கூடுதல் செய்தி ஆதாரம்…
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி, 2022ம் ஆண்டு வெளியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


