‘’ நடிகை சாய் பல்லவி திருமணம் செய்துகொண்டார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது உண்மையல்ல.

ஆம், இந்த புகைப்படம் கடந்த 2023 மே மாதம் நடைபெற்ற SK 21 தமிழ் சினிமா பூஜையின்போது எடுக்கப்பட்டதாகும். சிவ கார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு இன்னமும் தலைப்பு அறிவிக்கப்படாத சூழலில், SK 21 என்ற பெயரில் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. Raaj Kamal Films International இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் Rajkumar Periasamy படப் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து, நடிகை சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார்.

இதில் ஒரு புகைப்படத்தை வைத்தே, மேற்கண்ட வகையில் சிலர் சாய் பல்லவி திருமணம் செய்துகொண்டதாக, வதந்தி பரப்புகின்றனர். முழு படம் கீழே தரப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் படத்தை மேற்கண்ட படத்துடன் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி உண்மையல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:நடிகை சாய் பல்லவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை…!

Written By: Fact Crescendo Team

Result: False