
‘‘விஜய்க்கு ஆதரவாக திரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இந்த உலகமே உனக்கு எதிரா இருந்தாலும் நான் ஒருபோதும் உன்னை விட்டு விலகமாட்னேன்- அண்ணி த்ரிஷா STATEMENT …🔥🔥🔥
Nice la.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்ற எந்த பதிவும் சமீபத்தில் நடிகை திரிஷா வெளியிடவில்லை, என்று தெரியவந்தது. இதில் உள்ள எழுத்துகள், ஃபாண்ட் போன்றவை எடிட் செய்யப்பட்டது போன்று உள்ளது.
தவெக., தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து கூறியிருந்தார்.
அவரது பேச்சுக்கு, பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. இதையடுத்து, நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், நடிகை திரிஷா சார்பாக, அவரது வழக்கறிஞர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை திரிஷா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இதனையே தனது Instagram story ஆகவும் 16.02.2026 அன்று வைத்திருந்தார்.

இதனை எடிட் செய்து, வேண்டுமென்றே விஜய்க்கு ஆதரவாக, திரிஷா பதிவு வெளியிட்டதாக, வதந்தி பரப்புகிறார்கள்.

கூடுதல் ஆதாரத்திற்காக, திரிஷா தரப்பிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:விஜய்க்கு ஆதரவாக திரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


