இஸ்லாமியர்கள் வாக்கு இல்லாமலேயே ராயபுரம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று ஜெயக்குமார் கூறினாரா?  

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘இஸ்லாமியர்கள் வாக்கு இல்லாமலேயே ராயபுரம் தொகுதியில் வெற்றி பெறுவேன்,’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இஸ்லாமியர்கள் வாக்கு இல்லாமலேயே ராயபுரம் தொகுதியில் வெற்றிப்பெறுவேன் என ஜெயக்குமார் பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link        

News Tamil 24X7 லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது News Tamil 24X7 பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக, News Tamil 24X7 ஊடகத்தின் ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது, ‘’இது எங்களது பெயரில் வேண்டுமென்றே பகிரப்படும் வதந்தி. உண்மையான நியூஸ் கார்டு இல்லை,’’ என்று தெரிவித்தனர்.  

அடுத்தப்படியாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் கேட்டபோது, ‘’இவ்வாறு எந்த கருத்தும் கூறவில்லை,’’ என்று விளக்கம் கூறப்பட்டது. மேலும், இதுதொடர்பாக ஜெயக்குமார் X வலைதள பக்கத்தில் மறுப்பு கூறி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: இஸ்லாமியர்கள் வாக்கு இல்லாமலேயே ராயபுரம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று ஜெயக்குமார் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply