மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை இழுத்துச் சென்ற போலீசார் என்ற தகவல் உண்மையா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu தவறாக வழிநடத்துபவை I Misleading

‘’மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை இழுத்துச் சென்ற போலீசார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய அப்பாவி பெண்ணை தாக்கி இழுத்துச் சென்ற காட்சி ….

ஒரு நாயை கல்லால் எடுத்து அடித்தால் பீட்டா அமைப்பு ஓடி வந்து கேள்வி கேட்கிது

ஸ்டாலின் ஆட்சில நடக்கக்கூடிய கொடுமைகள் எல்லாம் எந்த ஊடகத்திலும் வர மாட்டேங்குது

இங்க இருக்கக்கூடிய சினிமா பிரபலங்களுக்கு கண்ணு தெரியல

சமூக போராளிகள் எல்லாம் வேறு மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து விட்டனர்

திமுக கிட்ட இருந்து வாங்கி தின்ற கூட்டணி கட்சித் அல்லக்கைகள் எல்லாம் கல்யாண நாள் வாழ்த்து சொல்றது வரிசையில் போய் நிக்குது” என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2    

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோ கடந்த 2021ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒன்று எனவும், இதற்கும் தற்போதைய திமுக ஆட்சிக்கும் தொடர்பில்லை எனவும் தெரியவந்தது. 

இதன்படி, 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க, பொதுமக்கள் ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக, ஜனவரி 02, 2021 அன்று திமுக சார்பாக, கோவையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அன்றைய அதிமுக அமைச்சர் வேலுமணி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசியதால், பெண் ஒருவர் குறுக்கிட்டு வாக்குவாதம் செய்தார். இதையடுத்து, அவரை போலீசார் அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான காட்சிகள் அப்போதே சமூக வலைதளங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

News 18 Tamil l Dinamalar Link l BBC Tamil 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை இழுத்துச் சென்ற போலீசார் என்ற தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

Leave a Reply