ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கக் காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 கிராம் தங்கக் காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Twitter Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்தார்.

Dinakaran link l bbc link 


இதையடுத்து, இடைத்தேர்தல் பணிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக, அதிமுக கூட்டணி தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. இந்த சூழலில்தான் மேற்கண்ட வகையில், வாக்காளர்களுக்கு 2 கிராம் தங்கக் காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, சிலர் செய்தி பரப்புகின்றனர். 

உண்மையில், இவ்வாறு திமுக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தவிர, இது நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் லோகோவை முறைகேடாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள போலியான நியூஸ் கார்டு. இதுபற்றி நாம் அந்த ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கக் காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False