புர்கா அணிந்து விளையாடிய வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Altered அரசியல் சார்ந்தவை | Political சர்வதேசம் | International

ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் புர்கா அணிந்து விளையாடியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புர்கா அணிந்த பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து மோதுவது போன்று கீழே ஸ்கோர் கார்டு உள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷ் இந்தியாவ விட முன்னேறிச்சின்னு இந்த மர்ம நபர்கள் & திமுக உபிஸ்க உருட்டுறது உண்மை தான் போல…

கிரவுண்ட்ல கொசு மருந்து அடிக்கிறவங்களுக்கு கூட புல்லா கவர் பண்ற யூனிபார்ம் கொடுத்துருக்காங்னுங்க…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசம் முன்னேறிவிட்டது என்று எந்த தி.மு.க உபிஸ் உருட்டினார்கள் என்று தெரியவில்லை, தி.மு.க-வை வைத்து பலரும் இப்படி சமூக ஊடகங்களில் உருட்டி வருகின்றனர். குறைந்தபட்சம் அவர்கள் பரப்பிய புகைப்படமாவது உண்மையா என்று பார்த்தோம். ஆய்வு செய்யாமலேயே இது போலியான புகைப்படம் என்பது தெரியவந்தது.

புகைப்படத்தின் கீழே ஒரு ஓரத்தில் ஜெமினி ஏஐ உருவாக்கும் ஏஐ புகைப்படங்களில் இடம் பெறும் வாட்டர் மார்க் லோகோவை காண முடிகிறது. இதுவே இந்த புகைப்படம் போலியானது என்பதை உறுதி செய்கிறது. இருப்பினும் ஐசிசி வௌியிட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வை தொடர்ந்தோம்.

Archive

வங்கதேச மகளிர் அணியினர் புர்கா அணிந்து விளையாடி இருந்தால் அது தொடர்பான செய்தி வெளியாகி இருக்கும். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. ஐ.சி.சி வெளியிட்டிருந்த வங்கதேசம் – நியூசிலாந்து அணி போட்டியின் ஹைலைட்டை தேடி எடுத்து பார்த்தோம். அதிலும் எந்த இடத்திலும் வங்கதேச அணியினர் புர்கா அணிந்தது போல் ஒரு காட்சியையும் காண முடியவில்லை.

அடுத்ததாக ஏஐ புகைப்படங்களைக் கண்டறிய உதவும் இணையதளத்தில் இந்த புகைப்படத்தைப் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அதிலும் கூட “இந்த புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. ஒரு சதவிகிதம் அளவுக்குக் கூட உண்மையில்லை” என்று தெரியவந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்துள்ளது.

முடிவு:

ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புர்கா அணிந்து விளையாடிய வங்கதேச அணியினர் என்று பரவும் புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:புர்கா அணிந்து விளையாடிய வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply