
‘‘சல்யூட் கூட அடிக்கத் தெரியாத விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘தொண்டன் தான் காலை தூக்கி கோமாளிதனம் பண்றான்னா, இந்த கிறுக்கனும் அதையே செய்யறான் 🤦♂️’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் தவெக தலைவர் விஜய் மற்றும் ஒருவர் காலை தூக்கியபடி, சல்யூட் செய்வதுபோன்று புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். Hivemoderation, Wasitai போன்ற இணையதளங்கள் உதவியுடன் சரிபார்த்தபோது, இது AI மூலமாக தயாரிக்கப்பட்டது, என்று தெரியவந்தது.

அடுத்தப்படியாக, தவெக தலைவர் விஜய் சேலம் வந்தது பற்றி வெளியான ஊடகச் செய்திகளை பார்த்தோம்.

அவற்றில் எங்கேயும் விஜய் காலை தூக்கி, சல்யூட் அடித்ததாகக் கூறப்படவில்லை. மாறாக, நின்றபடி சல்யூட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூடுதல் செய்தி ஆதாரம்…
News18 Tamil Nadu l Thanthi TV l News Tamil 24X7
இறுதியாக, நாம் தவெக தலைமைக்கழகத்தில் பேசி, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம், என்று உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:சல்யூட் கூட அடிக்கத் தெரியாத விஜய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


