முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கூறினாரா?
‘’முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கருத்து,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி லோகோவுடன் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’அதிமுகவிற்கு பக்கபலமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற பொறாமையில் எதிர்ப்பு தெரிவிக்கும் முக்குலத்தோர் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை! – அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்ற சந்தேகத்தின் பேரில், தந்தி டிவி ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டோம். அவர்கள், ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் வதந்தி. இதுபற்றி ஏற்கனவே விளக்கம் அளித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறோம்,’’ என்றனர்.
இதன்பேரில், அவர்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவின் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, இசக்கி சுப்பையா பெயரில் பகிரப்படும் போலியான செய்தியே இது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False