FactCheck: பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி…

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை – எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதால், எச்.ராஜா பற்றி அவ்வப்போது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதும், அவர் பெயரில் போலியான செய்திகள் பகிரப்படுவதும் வழக்கமாக உள்ளது. இதுபற்றி நாமும் அவ்வப்போது உண்மை கண்டறியும் சோதனை செய்து, செய்தி வெளியிட்டு வருகிறோம். அவற்றில் சிலவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Tamil Article Link 1

Fact Crescendo Tamil Article Link 2

Fact Crescendo Tamil Article Link 3

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்தியே மேற்கண்ட நியூஸ் கார்டும். அதில் உள்ள ஃபாண்ட், எழுத்துப் பிழை போன்றவற்றை உற்று கவனித்தாலே அது போலிச் செய்தி என்பதை உணரலாம்.

இருந்தாலும், சந்தேகத்தின் பெயரில் இதுபற்றி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் விசாரித்தோம். அவர்கள், இப்படி எச்.ராஜா சமீபத்தில் பேசவில்லை, என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, தந்தி டிவி ஆசிரியர் குழுவில் இதுபற்றி விசாரித்தோம். அவர்களும் இது போலியான செய்தி, என்று விளக்கம் அளித்தனர்.

எனவே, இது போலிச் செய்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply