
‘’தீவிரவாதி சடலத்தைப் பார்த்து கதறி அழும் பாகிஸ்தான் மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ எங்கள மட்டும் மதம் கேட்டு உள்ளாடையை அவுத்து சு பார்த்து சுட்டு கொன்னீங்க…😡 இப்ப நீங்க எதுக்காக அழுகுறீங்க,,?,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் சடலம் ஒன்றை சுற்றி ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று, கதறி அழுவது போன்ற காட்சிகள் கொண்ட ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும்போது, பாஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பாகிஸ்தான் மக்கள், என்பது போன்று உள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவுக்கும், தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது.
ஆம், குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள shady_atall என்ற வாட்டர்மார்க் அடிப்படையாக வைத்து, தகவல் தேடியபோது, உண்மையான வீடியோ லிங்க் கிடைத்தது. கடந்த மார்ச் மாதம் இந்த வீடியோ முதன்முதலாக, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டிருந்தது. ஆனால், இது Hossam Shabat என்ற ஊடகவியலாளரின் இறுதிச் சடங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும் சில வீடியோக்கள் பகிரப்பட்டிருந்தன. அவற்றில் சிலவற்றை கூடுதல் ஆதாரத்திற்காக, கீழே இணைத்துள்ளோம்.
இதன்படி, கடந்த மார்ச் மாதம், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த Al Jazeera ஊடகத்தின் பணியாளர் Hossam Shabat கொல்லப்பட்டுள்ளார். அவரது இறுதிச்சடங்கில் சக பணியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் சூழ்ந்துகொண்டு, கதறி அழுத காட்சிதான் இது…
கூடுதல் ஆதாம் இதோ…
எனவே, காஸாவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றை எடுத்து, தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:தீவிரவாதி சடலத்தைப் பார்த்து கதறி அழும் பாகிஸ்தான் மக்கள் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
