மு.க.ஸ்டாலின் தலையில் விக் மாட்டும் புகைப்படம் என்று பகிரப்படும் வதந்தி…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’மு.க.ஸ்டாலின் தலையில் விக் மாட்டும் புகைப்படம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில் பலரும் இது உண்மையான புகைப்படம் என்றே கருதி, ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட் பகிர்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
மு.க.ஸ்டாலின் தலையில் செயற்கை முடிகளை நட்டு, சிகை அலங்காரம் செய்துள்ளார் என்பது உண்மைதான். அது தலையின் முன் பகுதியாகும். அவருக்குப் பின்னந்தலையில் இப்படி எந்த சொட்டையும் விழவில்லை. தலைமுடிக்காக அவர் பிரத்யேக சிகிச்சை எடுத்துக் கொள்வதும் ஊடகங்களில் ஏற்கனவே வெளியான செய்திதான். 

Tamil OneIndia Link I Samayam Tamil Link

உண்மை இப்படியிருக்க, சிலர் வேண்டுமென்றே கேலி செய்யும் வகையில், மு.க.ஸ்டாலினின் பின்னந்தலையில் விக் வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டு மேற்கண்ட புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.

ஆனால், இது எடிட் செய்யப்பட்ட புகைப்படமாகும். உண்மையானதல்ல…

உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டும் மு.க.ஸ்டாலின், அவ்வப்போது அதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாகும். அந்த வரிசையில் வெளியான புகைப்படம் ஒன்றை எடுத்தே மேற்கண்ட வகையில் எடிட் செய்துள்ளனர்.

News18 Tamil Link I ABPlive Link

முழு வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலையில் விக் வைத்துள்ளார் என்பது உண்மைதான். இருந்தாலும், அவர் சொட்டை தலையுடன் ஜிம்மில் பயிற்சி செய்யும்போது விக் மாட்டப்பட்டதாகக் கூறி பகிரப்படும் மேற்கண்ட புகைப்படம் தவறான ஒன்றாகும்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:மு.க.ஸ்டாலின் தலையில் விக் மாட்டும் புகைப்படம் என்று பகிரப்படும் வதந்தி…

Fact Check By: Fact Crescendo Team 

Result: Altered