
‘‘திமுக, தவெக சார்பாக ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்று தமிழ்நாடு மக்கள் பேனர் வைத்தனர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’தவெக தற்குறி நாயே. இந்த தெருவில் பெண்கள் உள்ளார்கள். வாக்கு கேட்டு வராதே’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதேபோன்று, ‘’ திமுக தற்குறி நாய. இந்த தெருவில் பெண்கள் உள்ளார்கள். வாக்கு கேட்டு வராதே,’’ என்று எழுதப்பட்ட மற்றொரு புகைப்படத்தையும் கீழே இணைத்துள்ளோம்.

Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். கூகுள் ரிவர்ஸ் இமேஜ் உதவியுடன் தேடியபோது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.

இதன்படி, உண்மையான புகைப்படத்தில் ‘’ திருட்டு நாயே இங்கு குப்பை போடதே. மீரினால் செருப்பு அடிவிழம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை எடிட் செய்துதான், திமுக தரப்பும், தவெக தரப்பும் மாறி மாறி தவறான தகவல் பரப்புகிறார்கள்.

கூடுதல் ஆதாரத்திற்காக, wasitai மற்றும் hive moderation ஆகிய இணையதளங்கள் உதவியுடன் சரிபார்த்து, இவை AI முறையில் தயாரிக்கப்பட்ட படங்கள்தான், என்பதை உறுதி செய்தோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டவை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:திமுக, தவெக சார்பாக ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்று தமிழ்நாடு மக்கள் பேனர் வைத்தனரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


