குப்பைத்தொட்டியில் கூட மு.க.ஸ்டாலின் படம்; விளம்பரம் தேடும் திமுக என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’ குப்பைத்தொட்டியில் கூட மு.க.ஸ்டாலின் புகைப்படம் ஒட்டி விளம்பரம் தேடும் திமுக,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ரொம்ப ஓவரா போறீங்க டா? 

அது சரி ✅

எனக்கு ஒரு டவுட்டு❓

இது 

மக்கும் குப்பையா ❓  

மக்காத குப்பையா ❓,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2   

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, X வலைதளத்தில் பகிரப்பட்டிருந்த ஒரு பதிவின் லிங்க் கிடைத்தது. 

X Post Link 

இதில், ‘’லண்டனில் படித்து திரும்பி வந்த அண்ணாமலையின் பெயர் சூட்டப்பட்டது 😂😂😂

#சம்பவம் Vmt Rajaramanan Thiruvanmiyur,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதன்மூலமாக, vmt_rajaramanan என்ற திமுக., நிர்வாகி, அண்ணாமலையின் புகைப்படத்தை போஸ்டராக அச்சிட்டு, குப்பைத் தொட்டி, பொதுக் கழிப்பறை போன்ற இடங்களில் ஒட்டுவதுபோல, புகைப்படம் எடுத்து, அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்

இந்த புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்துதான் மு.க.ஸ்டாலின் படத்தை சேர்த்து, பாஜக ஆதரவாளர்கள், தகவல் பரப்புவதாக, தெளிவாகிறது. 

உண்மையான புகைப்படத்தையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

கூடுதல் ஆதாரத்திற்காக, சம்பந்தப்பட்ட நபர் தரப்பிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

இவற்றின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம், எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:குப்பைத்தொட்டியில் கூட மு.க.ஸ்டாலின் படம்; விளம்பரம் தேடும் திமுக என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered