FactCheck: ஜனவரி 15 சுதந்திர நாள் என்று முதலமைச்சர் உரையின்போது மு.க.ஸ்டாலின் பேசினாரா?

அரசியல் சமூகம் தமிழ்நாடு

‘’ஜனவரி 15 சுதந்திர நாள் என்று உளறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அவர் ஜனவரி 15 சுதந்திர நாள் என்று உளறிவிட்டதாகக் கூறி, இந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:
சென்னையில் நடைபெற்ற 75வது சுதந்திர நாளில் மு.க.ஸ்டாலின் இவ்வாறு எதுவும் உளறியிருந்தாரா என தகவல் தேடினோம். அப்போது, அவர் இப்படி எதுவும் பேசவில்லை என்று தெரியவந்தது. குறிப்பாக, சுதந்திர தினக் கொண்டாட்டம் பற்றி தந்தி டிவி வெளியிட்ட வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவிலும், தந்தி டிவியின் லோகோவுடன், மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, சமீபத்தில் தந்தி டிவி இப்படி ஏதேனும் செய்தி வெளியிட்டதா, என நீண்ட நேரம் தேடினோம்.

நீண்ட தேடலுக்குப் பின், நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில், சுதந்திரம் மற்றும் குடியரசு தின தேதியை தவறாகக் குறிப்பிட்டார் ஸ்டாலின் எனக் குறிப்பிட்டு, திசையும் எட்டு தந்தி டிவி வெளியிட்ட இந்த செய்தியின் முழு வீடியோ நமக்கு கிடைத்தது.

இந்த வீடியோவின் 1.59 நிமிடத்தில் வரும் ஃபிரேமை பிரித்தெடுத்து, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர் என தெரியவருகிறது.

2017ம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜனவரி 25 என்றும் டிசம்பர் 25 என்றும் குடியரசு தினத்தைக் குறிப்பிட்டு, மு.க.ஸ்டாலின் தவறாகப் பேசியிருந்தார். பிறகு, அதனை மேடையிலேயே திருத்திக் கொண்டு ஜனவரி 26 குடியரசு தினம் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த நிகழ்வை எடுத்து, 2021 சுதந்திர தின உரையின்போது அவர் உளறியதாகக் கூறி வதந்தி பரப்பி வருகின்றனர்.

Vikatan News Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 2017ம் ஆண்டில் நெல்லையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார் என்றும், முதலமைச்சர் ஆன பின், நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் இவ்வாறு எதுவும் அவர் பேசவில்லை என்றும் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஜனவரி 15 சுதந்திர நாள் என்று முதலமைச்சர் உரையின்போது மு.க.ஸ்டாலின் பேசினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •