அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜையில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளதா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜையில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதே புகைப்படங்களை வைத்து, ஃபேஸ்புக், எக்ஸ் வலைதளம் பலவற்றிலும் பதிவுகள் பகிரப்படுகின்றன. 

அவற்றில், ‘’ அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜயில் பெரியார் 🔥🔥 கதருங்க டா சங்கீஸ்.’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் மார்பளவு பெரியார் சிலை, டிரம்ப் மேஜையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. 

Claim Link 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது உண்மையான புகைப்படம் கிடையாது என்றும், எடிட் செய்யப்பட்டது என்றும் தெரியவந்தது. 

ஆம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அலுவலக மேஜையில் இருப்பது அந்நாட்டின் முன்னாள் அதிபர் Benjamin Franklin சிலை; பெரியார் சிலை கிடையாது. 

வீடியோ லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

சில நாட்கள் முன்பாக, Florida Gaters கூடைப்பந்து அணியின் வீரர் Olivier Rioux என்பவரை மரியாதை நிமித்தமாக, டொனால்டு டிரம்ப் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆலிவரின் உயரத்தைப் பார்த்து, டிரம்ப் சற்று பிரமித்தார். 

இதுதொடர்பான வீடியோவை, டிரம்பின் அதிகாரப்பூர்வ உதவியாளர் Margo Martin, அவரது X வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதனையும் ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம். 

எனவே, டிரம்ப் மேஜையில் வைக்கப்பட்டுள்ள பெஞ்சமின் ஃபிராங்ளின் சிலையை எடுத்துவிட்டு, அதில் பெரியார் சிலையை சேர்த்து, சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜையில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளதா?

Written By: Pankaj Iyer  

Result: Altered

Leave a Reply