
‘‘திமுக மகளிர் மாநாட்டில் வீரன் சரக்கு பாட்டில் விநியோகம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இன்று திமுக மகளிர் மாநாட்டில் வீரன் சரக்கு Bottle.!’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது. இதற்கும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Dinamani Link l News 18 Tamil l Nakkheeran Link
இதுதொடர்பாக, நாம் திமுக ஐடி பிரிவு தரப்பிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:திமுக மகளிர் மாநாட்டில் வீரன் சரக்கு பாட்டில் விநியோகிக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


