சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?  

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ எதிரியா இருந்தாலும், ஒரு எட்டு எட்டி போய் பார்த்துட்டு வந்திரணும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது AI முறையில் தயாரிக்கப்பட்டது, என்று தெரியவந்தது. 

Wasitai, Hive Moderation, Sight Engine Tool போன்ற இணையதளங்கள் உதவியுடன் மேற்கண்ட புகைப்படத்தை பகுப்பாய்வு செய்து, உறுதிப்படுத்தியுள்ளோம். 

அடுத்தப்படியாக, இதுபோன்று சோனியா காந்தி மற்றும் மோடி சந்தித்துக் கொண்டதாக, எதுவும் செய்தி வெளியாகியுள்ளதா என்று பார்த்தோம். அவ்வாறு எந்த செய்தியும் காணப்படவில்லை. 

தொடர்ந்து, நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாட்டர் மார்க் அடிப்படையில் விவரம் தேடினோம். அப்போது, Mahi Hemram என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற படங்கள் தொடர்ச்சியாக, பகிரப்பட்டு வருவதைக் கண்டோம். 

குறிப்பிட்ட நபரிடம் நாம் ஃபேஸ்புக் மெசெஞ்சர் மூலமாக, தொடர்புகொண்டோம். அவர் ‘’குறித்த புகைப்படம் பொழுதுபோக்கு நோக்கில் Google AI உதவியுடன் தயாரிக்கப்பட்டது. அரசியல் சர்ச்சை ஏற்பட்டதால், அந்த படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அகற்றிவிட்டேன்,’’ என்று கூறினார்.  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply