‘’பாங்காங் செல்லும் ராகுல் காந்தி – டிக்கெட் ஆதாரம் இதோ,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ 24 பாராளுமன்றத்‌ தேர்தலில்

வெற்றிவாகை சூடிய

கான்கிராஸ் பிரதமர்

வேட்பாளர் நேரு குடும்ப

பட்டத்து இளவரசர்

ராகுல் காந்தி அவர்கள்

ஜூன் 6ந்தேதி

பாங்காக்கில் இந்தியப்

பிரதமர் பதவியை ஏற்றுக்

கொள்ள இருக்கிறார்.அதற்காக

5ந்தேதி இரவு 11.05க்கு விமானத்தில் பாங்காங்

புறப்பட்டுச் செல்கிறார். ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இவர்கள் குறிப்பிடும் விமான டிக்கெட்டை உற்று கவனித்த போது, அது டிக்கெட் இல்லை; boarding pass என்று தெரியவந்தது. பொதுவாக, போர்டிங் பாஸ் என்பது விமானம் புறப்படுவதற்குச் சில மணி நேரம் முன்பாக மட்டுமே வழங்கப்படும். இருக்கை எண், விமானம் புறப்படும் நேரம், இலக்கை சென்றடையும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஜூன் 5, 2024 இரவு 11.05 மணிக்கு ராகுல் காந்தி பாங்காங் செல்லும் விமானம் புறப்படுகிறது என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புகைப்படத்தில் உள்ள டிக்கெட்டில் புறப்படும் நேரம் 11.45 என்று உள்ளது; Boarding time 11.05 என்றும் உள்ளது. எனவே, இது உண்மையான டிக்கெட் இல்லை என்ற சந்தேகம் ஏற்பட்டது.

அடுத்தப்படியாக, மேற்கண்ட புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விமானத்தின் பெயர் UK 115 என்பதை வைத்து தகவல் தேடினோம். அப்போது, Vistara நிறுவனத்திற்குச் சொந்தமான UK 115 என்ற விமானம் டெல்லி – சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் ஒன்று; பாங்காங் செல்லாது என தெரியவந்தது. மேலும், இந்த விமானம் தினசரி இரவு 11.45 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் என்றும் விவரம் கிடைத்தது.

தொடர்ந்து, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது ஏற்கனவே https://livefromalounge.com/ என்ற இணையதளத்தில் கடந்த 2019ம் ஆண்டு பகிரப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.

குறிப்பிட்ட UK 115 விமான சேவை பற்றி 2019, ஆகஸ்ட் 7ம் தேதி Onboard Vistara To Singapore: The first Vistara international flight ever! என்ற தலைப்பில் மேற்கண்ட இணையதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள புகைப்படம் ஒன்றை எடுத்தே இவ்வாறு எடிட் செய்து, ராகுல் காந்தி பெயரில் வதந்தி பரப்புகின்றனர்.

உண்மையான புகைப்படத்தையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வேறொரு புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்து, ‘ராகுல் காந்தி பாங்காங் செல்லும் விமான டிக்கெட்’ என்று வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பாங்காங் செல்லும் ராகுல் காந்தி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team

Result: Altered