பிரியாணி சாப்பிட்ட தமிழிசை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிடுவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆட்டை பிரியாணி போட்டு சாப்பிடும் போது அக்கா முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம், “ஒரிஜினல்” பிரியாணி போல..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முன்னாள் தலைவர் தமிழிசை பொதுவெளியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இருவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், தமிழிசையை நேரில் சந்தித்து பிரச்னைக்கு தற்காலிக முற்றுப்புள்ளியை வைத்தார் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து கட்சியில் சில நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக அறிவிப்புகள் வெளியானது.

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் தமிழிசை பிரியாணி சாப்பிட்டது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா, எடிட் செய்யப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

Archive

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு எந்த விவரமும் கிடைக்கவில்லை. எனவே, வேறு வேறு அடிப்படை வார்த்தைகளை பயன்படுத்தித் தேடினோம். அப்போது தமிழிசை 2016ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால், அதில் பிரியாணி சாப்பிடுவது போன்று புகைப்படம் இல்லை.

2016ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவில் விழாவில் பங்கேற்க அனுமதிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரையும் தனித் தனியாக சந்தித்துப் பேச சென்ற போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வம் என்பவரது வீட்டில் உணவு உண்டபோது எடுத்த படம் என்று அந்த பதிவில் தமிழிசை குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தமிழிசை பிரியாணி சாப்பிட்டார் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிரியாணி சாப்பிட்ட தமிழிசை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply