‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று விகடன் கார்ட்டூன் வெளியிட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’சாராய வியாபாரி ஸ்டாலின்’’ என்று விகடன் கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ சாராய வியாபாரி ஸ்டாலின்’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 

ஆனந்த விகடன் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் விகடன் ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக, இவ்வாறு கார்ட்டூன் எதுவும் சமீபத்தில் நாங்கள் வெளியிடவில்லை. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு முழுக்க உள்ள திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி அளித்து, திமுக அரசு ஆணை வெளியிட்டது. இதனை விமர்சனம் செய்யும் விதமாக, ‘டாஸ்மாக் weds தமிழ்நாடு’ என்று தலைப்பிட்டு அப்போது நாங்கள் ஒரு கார்ட்டூன் வெளியிட்டோம். அதனையே எடிட் செய்து, சிலர் தற்போது வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.  

உண்மையான கார்ட்டூன் லிங்க் இதோ… 

உண்மையான கார்ட்டூனையும், போலியான கார்ட்டூனையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

எனவே, 2023ம் ஆண்டு விகடன் ஊடகம் வெளியிட்ட கார்ட்டூனை எடுத்து, எடிட் செய்து, தற்போதைய கள்ளக்குறிச்சி சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று விகடன் கார்ட்டூன் வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: ALTERED