பொள்ளாச்சியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்த காட்சி என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
‘’ பொள்ளாச்சியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்த காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஓடும் அரசுப் பேருந்தின் கூரை பறந்ததால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு
காற்று பலமாக வீசியதால் இச்சம்பவம் நடந்ததாகவும், பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என்றும் தகவல்.
#Pollachi #GovtBus
திராவிட மாடல் பஸ்😁😁😁😂😂..’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் சன் நியூஸ் லோகோ உள்ளது. இதன் அடிப்படையில் சன் நியூஸ் ஃபேஸ்புக் பக்கம் சென்று, இதுபோல ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என விவரம் தேடினோம்.
அப்போது, கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 14ம் தேதியன்று சன் நியூஸ் சார்பாக, இந்த வீடியோ பற்றிய செய்தி பகிரப்பட்டிருந்ததைக் கண்டோம். ‘’ஓடும் அரசுப் பேருந்தின் கூரை பறந்ததால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு காற்று பலமாக வீசியதால் இச்சம்பவம் நடந்ததாகவும், பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என்றும் தகவல். #Pollachi #GovtBus’’ என்று அந்த செய்திக்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், 2019ம் ஆண்டு (2011 முதல் 2021 வரை) தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியே நடைபெற்றது.
2011 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்த திமுக, அதற்குப் பின் 2021ம் ஆண்டுதான் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தது.
எனவே, 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது பகிர்ந்து, வேண்டுமென்றே சிலர் திமுக ஆட்சி பற்றி வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:பொள்ளாச்சியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்த காட்சி என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False