
‘’ரஜினிகாந்த் பற்றி புண்டப்ரே புண்டரே எனக் கூறி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பாக, திருவொற்றியூர் பகுதியில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், இதில், ‘’புண்டப்ரே புண்டரே‘’, எனக் கூறியுள்ளதால், இதனை வைத்து, ரஜினியையும், அவரது ரசிகர்களையும் கிண்டல் செய்து பலரும் இந்த போஸ்டர் புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot: similar facebook posts
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
Facebook Claim Link 4 | Archived Link 4 |
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது உண்மையான போஸ்டரா என்றால் இல்லை. இதுபற்றி ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்தும் வருகின்றனர். உண்மையான போஸ்டரில், ‘’சண்டப்ர சண்டரே’’ என உள்ளது. அதனை எடிட் செய்து, இவ்வாறு ‘’புண்டப்ரே புண்டரே‘’ எனச் சிலர் வேண்டுமென்றே பகிர்ந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.

இதில் உள்ள ‘’சண்டப்ர சண்டர்,’’ என்ற சொற்றொடரை ‘’சண்டப் பிரசண்டன்’’ என்றும் பக்தி இலக்கியத்தில் சொல்வார்கள். தட்டிக் கேட்க முடியாத படு பயங்கரமானவன் என்ற அர்த்தத்தில் இதனை பிரயோகிப்பார்கள். இதனை சிவ வழிபாடு செய்பவர்கள் அதிகம் பயன்படுத்துவதும் உண்டு.
அந்த அர்த்தத்தில்தான் இந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் வைத்துள்ளனர். அதன் புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்து பலரும் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ரஜினிகாந்த் பற்றி அவரது ரசிகர்கள் ‘புண்டரே’ என்று போஸ்டர் ஒட்டியதாகப் பரவும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
