மோடியை கேள்வி கேட்ட ஐஸ்வர்யா ராய் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘’மோடியை கேள்வி கேட்ட ஐஸ்வர்யா ராய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பாகிஸ்தான் இடம் ஆறு  விமானங்களை இழந்தோம்?
நான்கு ரஃபேல் வீழ்ந்தது எப்படி?
எஸ் 400 சிஸ்டம் இரண்டை எப்படி வீழ்த்தினார்கள்?
300 ராணுவ வீரர்களை எப்படி பலி கொடுத்தீர்கள்?
காஷ்மீர்  &  ராஜஸ்தான் எல்லை பகுதிகளை பாகிஸ்தான் எப்படி விழுங்கியது?
நல்ல கேள்விகள் பதில் மட்டும் வராது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் மோடிக்கு முன்பாக ஐஸ்வர்யா ராய் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

Claim Link 1 l Claim Link 2       

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று தெரியவந்தது. 

இதன்படி, கடந்த நவம்பர் 19, 2026 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார். அதன்பின்னர் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய், “There is only one caste, the caste of humanity. There is only one religion, the religion of love. There is only one language, the language of the heart, and there is only one God, and he is omnipresent” என்று தெரிவித்தார்.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Live Mint l NDTV l CNN-News18 l The Hindu 

இதன்மூலமாக, ஐஸ்வர்யா ராய் குரலை மட்டும் எடிட் செய்து, அவர் பேசாத கருத்தை சேர்த்து, வதந்தி பரப்புகிறார்கள் என்று நமக்கு தெளிவாகிறது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மோடியை கேள்வி கேட்ட ஐஸ்வர்யா ராய் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer  

Result: Altered

Leave a Reply