‘’ அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் இடம்பெற்றுள்ளது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இவர்கள் கூறுவதுபோல அமெரிக்கா எதுவும் நேர்மையானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதா என்று விவரம் தேடினோம். ஆனால், இல்லை என்பதே உண்மை. இப்படி அவ்வப்போது வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இதற்கு முன்பாக, காமராஜர், மன்மோகன் சிங், மோடி போன்றோரின் பெயரை குறிப்பிட்டு இதேபோன்ற வதந்தி பரவியுள்ளது. நாமும், அவை பற்றி ஆய்வு செய்து, ஃபேக்ட்செக் கட்டுரை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் மேற்கண்ட திருமாவளவன் பற்றிய தகவலும் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:Rapid FactCheck: அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் உள்ளதா?

Written By: Fact Crescendo Team

Result: False