FactCheck: கொங்கு நாடு உருவாக்கப்படும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
‘’கொங்கு நாடு உருவாக்கப்படும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியீடு,‘’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆராயும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டின் மேற்கு மண்டல மாவட்டங்களை ஒன்றுசேர்த்து, கொங்கு நாடு என்ற பெயரில் புதிய யூனியன் பிரதேசமாக மத்திய அரசு பிரிக்க உள்ளது என்று கூறி, தினமலர் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பற்றி சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் நடைபெற்று வருகிறது.
இதையொட்டியே மேற்கண்ட புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இப்படியான நியூஸ் கார்டை புதிய தலைமுறை ஊடகம் வெளியிடவில்லை.
இதுபற்றி நாம் புதிய தலைமுறையின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘’இது எங்களது பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு. இதில், சில எழுத்துப் பிழைகளும் உள்ளன. இப்படி எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை,’’ என்றார்.
எனவே, இது புதிய தலைமுறை பெயரில் பரவும் போலிச்செய்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
Title:கொங்கு நாடு உருவாக்கப்படும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False