
‘’கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்ட காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ தற்போது கவின் கொல்லப்பட்ட வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ளது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இளைஞர் ஒருவர் மற்றொரு நபரை சாலை நடுவே வைத்து, கத்தியால் வெட்டுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், நாம் இதுதொடர்பாக ஊடகங்களில் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்வையிட்டோம்.
இதன்படி, ஆந்திரா மாநிலம், Palnadu மாவட்டத்தில் உள்ள Vinukonda நகரில், கடந்த 2024ம் ஆண்டு, தெலுங்கு தேசம் (TDP) கட்சியை சேர்ந்த ஒருவர், YSR காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரை சாலை நடுவே வைத்து, கைகளை வெட்டி, சித்ரவதை செய்து, இறுதியாக கழுத்தில் வெட்டிக் கொன்றார். சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். ரியல் எஸ்டேட் பிரச்னை ஒன்றின் காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
India Today l The Indian Express l Times Of India
இறுதியாக, நாம் தமிழ்நாடு DGP அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசி, மேற்கண்ட வீடியோவுக்கும், சமீபத்தில் நடைபெற்ற கவின் செல்வகணேஷ் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிசெய்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல், தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
