FactCheck: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் உண்மையானது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
‘’பொள்ளாச்சியில் உண்மையிலேயே கற்பழிப்பு நடந்ததா என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
உண்மை அறிவோம்:
எடப்பாடி பழனிசாமி சமீபத்தில், திமுக.,வைச் சேர்ந்த ஆ.ராசா, தனது தாயார் பற்றி விமர்சனம் செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய விசயமாக அமைந்தது.
இந்த சர்ச்சையின் பின்னணியில், எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் ஜோடிக்கப்பட்ட ஒன்று எனப் பேசியதாகக் கூறி சிலர் போலிச் செய்தியை பரப்பிவிட, அது சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்டிங் ஆனது. நாம் கூட அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருக்கிறோம்.
Fact Crescendo Tamil News Link
இந்த வரிசையில் பரப்பப்படும் மற்றொரு வதந்தியே, மேலே நாம் கண்ட, எடப்பாடி பழனிசாமி பற்றி நியூஸ்7 தமிழ் லோகோவுடன் பரப்பப்படும் செய்தியும்.
அப்படி அவர் எங்கேயும் இதுவரை பேசவில்லை. பேசியிருந்தால், பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கும். இந்த நியூஸ் கார்டை நியூஸ்7 தமிழ் ஊடகம் வெளியிட்டதா, என்று அதன் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’எங்களது பெயரில் பகிரப்படும் மற்றொரு போலிச் செய்தியே இது. உண்மையல்ல,’’ என்று கூறினார்.
எனவே, மேற்கண்ட தகவல் போலியான ஒன்றுதான், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:பொள்ளாச்சி பாலியல் விவகாரம் உண்மையானது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False