
‘’நண்பனின் விருப்பப்படி, அவனது இறுதிச்சடங்கில் இளையராஜா பாட்டு பாடிய நண்பர்கள்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதில், சடலம் ஒன்றின் முன்பாக, இளையராஜா இசையில் வெளிவந்த சினிமா பாடல் ஒன்றை கிடார் இசைத்தப்படி பாடும் காட்சி அடங்கிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதன் தலைப்பில், ‘’ இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்யக் கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி பரிசு.. இறுதி அஞ்சலி (பாடல்)… என் மரணத்திலும் நான் கேட்பது இதுவே.!!!! ,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot: fb posts with similar caption
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ மலேசியாவைச் சேர்ந்தது ஆகும். இதில், இருப்பவர்கள் நண்பரின் மரணத்திற்காக, இப்படி பாடல் பாடி இறுதி அஞ்சலி செலுத்தவில்லை. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இசைக்குழு ஒன்றையும் அவர்கள் நடத்தி வரும் நிலையில், குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மற்றும் இசைக்குழுவில் பங்களிப்பு செய்தவர் என்ற முறையில், குறிப்பிட்ட நபரின் மரணத்தின்போது, இவர்கள் இவ்வாறு பாடல் பாடி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதுபற்றி அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவர் ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்து தகவலும் பகிர்ந்திருக்கிறார்.

Daevin Raakesh FB Post Link I Archived Link
இந்த தகவல் பற்றி ஏற்கனவே, நமது இலங்கைப் பிரிவினர் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவை வெளியிட்டுள்ளனர். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். சம்பந்தப்பட்ட Daevin Raakesh-ஐ நேரிலும் தொடர்பு கொண்டு, விளக்கம் பெற்றுள்ளனர்.
எனவே, நண்பரின் இறுதி ஆசையை ஏற்று, அவருக்கு இளையராஜா பாடல் பாடி அஞ்சலி செலுத்திய நண்பர்கள் என்று கூறி பகிரப்படும் தகவலில் முழு உண்மை இல்ல என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நண்பன் விரும்பியபடி அவனது இறுதிச்சடங்கில் இளையராஜா பாட்டு பாடிய நண்பர்கள்- உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
