FactCheck: மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணை தாக்கிய மம்தா பானர்ஜி அரசு- உண்மை என்ன?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணை தாக்கிய மம்தா பானர்ஜி அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

மே 5, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம்பெண் ஒருவர் தலையில் ரத்தக் காயமடைந்த நிலையில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, மேலே, ‘’ மமதா ஆணவத்துல அழிய போறா… விரைவில்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் 2021 நடைபெற்று முடிவடைந்த நிலையில், அங்கு பல இடங்களில், பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடைய மோதல் வெடித்துள்ளதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுபற்றி அம்மாநில ஆளுநர் கூட அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

HindustanTimes Link

இந்த சூழலில், மேற்கு வங்கத்தில் தாக்கப்படும் இந்துக்கள், மம்தா கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் இந்துக்கள், என்று கூறி வித விதமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவை பற்றி நாமும் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link

இந்த வரிசையில், பகிரப்பட்டு வரும் மற்றொரு வதந்திதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படமும். ஆம், உண்மையில் இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்டதாகும். மேற்கு வங்கத்தில் நடைபெறும் தற்போதைய அரசியல் நிகழ்வுகளுக்கும், இதற்கும் தொடர்பில்லை.

கூகுள் உதவியுடன் நாம் முதலில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம். அப்போது, நமக்கு, 2020ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியான ட்வீட் ஒன்றின் லிங்க் கிடைத்தது.

இந்த ட்வீட்டில், வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங், அமன் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், வசித்து வரும் இந்து குடும்பத்தினரின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் அப்பகுதியை சேர்ந்த நில அபகரிப்பு கும்பல் அடித்து காயப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்பேரில், தொடர்ந்து, செய்திகளை தேடியபோது, நமக்குச் சில செய்தி இணைப்புகள் கிடைத்தன. 

bharatsamacharbengla.in Link

சுப்ரமணியன் சுவாமி இந்த சம்பவம் பற்றி கண்டனம் தெரிவித்துள்ளதாக, மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே, 2020 நவம்பர் மாதம் முதல் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

மேலும் வங்கதேசத்தைச் சேர்ந்த Desh1 ஊடகமும் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. 

desh1.com link

இந்த செய்தியை நாம் கூகுள் உதவியுடன் மொழிபெயர்த்து படித்துப் பார்த்தோம். அப்போது, வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங், அமன் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், வசித்து வரும் இந்து குடும்பத்தினரின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் அப்பகுதியை சேர்ந்த நில அபகரிப்பு கும்பல் அடித்து காயப்படுத்தியுள்ளது. அதில், அந்த வீட்டின் உரிமையாளரின் மருமகள் பலத்த காயமடைந்தார். அவர்தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண். இது மட்டுமின்றி, அவரது மொபைல் எண் கூட தொடர்புக்காக, இநத செய்தியில் தரப்பட்டிருக்கிறது.

எனவே, வங்கதேசத்தில் நடந்த நிகழ்வு தொடர்பான புகைப்படத்தை எடுத்து, மேற்கு வங்கத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணை தாக்கிய மம்தா பானர்ஜி அரசு- உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False